பேராசிரியர் முனைவர் இரா இளவரசு அவர்கள் தொடக்கம் முதலே தமிழில் வெளிவந்த
நூல்கள் பெரும் பாலானவற்றை நூல்கள் வெளி வந்தவுடனேயே வாங்கி, படித்து குறிப்பெடுத்து
வைத்தவர் என்பதை நான் நன்றாக அறிவேன்.. மேலும், பாவேந்தர் பாரதிதாசனின் படைப்புக்கள்
அனைத்தையும் படித்து உள்வாங்கிக் கொண்டவர்.. கிடைதற்கரிய வெளி வராத பாவேந்தரின் படைப்புக்களை த்
தேடி அலைந்து சேகரித்து, தொகுத்துப் பாதுகாத்தவர். அதன் பயனாக அவர் தமிழ் உலகத்துக்கு வழங்கிய நூல்களின்
பட்டியலைக் பதிவிடுவதில் பெருமையடைகிறோம்.
பேராசிரியர் முனைவர் இரா இளவரசு அவர்களால் எழுதி, வெளி யிடப்பட்டும் தமிழக அரசால்
அரசுடமையாக்கப் பட்ட நூல்கள்:
நண்பகல் ஞாயிறு (2002)
வரும்புயல் நாங்கள் (2002)
நிறைந்த அன்புடன் அணிந்துரைகள் (2002)
அலைகள் (2002)
பாவேந்தரின் உலக நோக்கு (2002)
பாவேந்தர் பாரதிதாசன் பாடல்கள்.. தலைப்பு அகரவரிசை, முதல் குறிப்பு அகரவரிசை. (2005)
பாரதிதாசனின் பழம்புதுப் பாடல்கள் (2005)
பாரதிதாசன் கடிதங்கள் (2005)
இந்திய விடுதலை இயக்கத்தில் பாரதிதாசன் (2005)
முரசின் முழக்கம் (2016)
மேலும், முது முனைவர் இளங்குமரன், முனைவர் கு திருமாறன் மற்றும் முனைவர் பி தமிழகன் ஆகியோரின்
துணையுடன்
பெரும் முயற்சியில் தொகுத்த "பாவேந்தம்" என்னும் 23 தொகுதி களாகிய
பெருங்களஞ்சியத்தைத் தமிழ்மண் பதிப்பகம் வழியாகப் பதிப்பித்து வெளியிட்டுள்ளார்.
இவ்வரிய நூல் தொகுப்புக்களின் விற்பனை உரிமையை New Century Book House வுக்கு கொடுத்துள்மையால்
அதை இப்பட்டியலில் இணைக்கவில்லை.
இவை அனைத்தையும் தமிழ் நாடு அரசு மின்னுருவாக்கம் செய்து தமிழ் இணையக் கல்விக் கழக இணைய மின்னூலகத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என ஆணையிட்டு, பல நூல்கள் மின்னுருவாக்கம் செய்து பதிவேற்றம் செய்யப் பட்டுள்ளன. அவற்றை பேராசிரியர் முனைவர் இரா இளவரசு நினைவு அறக்கட்டளை யின் இணைய தளத்திலும் பதிவேற்றம் செய்யப் பட்டுள்ளன.. இந்த முயற்சி தொடரும் என மகிழ்வுடன் பதிவிடுகிறோம்.
இதன் தொடர்ச்சியாக "இங்கிவனை யாம்பெறவே.." என்னும் நூலையும் வெளி யிட்டுள்ளோம்.
பேராசிரியர் முனைவர் இரா இளவரசு அவர்களால் எழுதி தற்போது தொகுக்கப்பட்ட மூன்று நூல்கள் 17-07-2022 அன்று சென்னையில் வெளி யிடப்பட்டுள்ளன. விரைவில் அவை அனைத்தும் மின்னுருவாக்கம் செய்து மின்னூலகத்தில் பதிவேற்றம் செய்யப் படும் என்பதைத் தாழ்மையுடன் பதிவிடுகிறேன்.
Ilavarasu.com என்னும் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளதால் தமிழறிஞர்களனைவரும் தங்களது படைப்புக்களை இதில் பதிவிட விழைகின்றோம்.
இன்னொரு மகிழ்ச்சி யான செய்தி...
பேராசிரியர் முனைவர் இரா இளவரசு அவர்களது வாழ் நாளில் தொகுத்து, நூலகமாக பாதுகாத்த, ஏறத்தாழ 20000 நூல்களையும் மின்னுருவாக்கம் செய்து மின்னூலகத்தில் பதிவேற்றம் செய்து உலகின் தமிழர்களுக்குப் பயன்படுமாறு செய்யலாம் என்று அறக்கட்டளை விரும்புகிறது.
இந்த விழைவை நிறைவேற்ற திரு சித்தானை அவர்கள் எங்களுக்கு பெரும் துணையாக உள்ளார்.
முதல் தவணையாக சுமார் 2000 நூல்களையும் ஓராயிரம் இதழ்களையும் தஞ்சை சரசுவதி மகால் நூலகத்திற்கு மின்னுருவாக்கம் செய்து மின்னூலகத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டி அனுப்பியுள்ளோம்.
மீதமுள்ளவற்றையும் விரைவில் தொகுத்து அனுப்ப முயற்சி க்கின்றோம். பல்வேறு கல்லூரிகளின் நூலகங்களுக்கும் அனுப்ப வேண்டும் என பேராசிரியர் முனைவர் இளமுருகன் மற்றும் முனைவர் புலவர் தமிழகன் ஆகியோரின் அறிவுறுத்துகின்றனர்.. அந்தந்த கல்லூரிகளின் நூலகர்கள் மற்றும் பேராசிரியர் கள் துணையுடன் பகுத்து அவர்களுக்கு அளிக்கவும் எண்ணம்.
பேராசிரியர் முனைவர் இரா இளவரசு அவர்கள் தொடக்கம் முதலே தமிழில் வெளிவந்த நூல்கள் பெரும் பாலானவற்றை நூல்கள் வெளி வந்தவுடனேயே வாங்கி, படித்து குறிப்பெடுத்து வைத்தவர் என்பதை நான் நன்றாக அறிவேன்.. மேலும், பாவேந்தர் பாரதிதாசனின் படைப்புக்கள் அனைத்தையும் படித்து உள்வாங்கிக் கொண்டவர்.. கிடைதற்கரிய வெளி வராத பாவேந்தரின் படைப்புக்களை த் தேடி அலைந்து சேகரித்து, தொகுத்துப் பாதுகாத்தவர்.
அதன் பயனாக அவர் தமிழ் உலகத்துக்கு வழங்கிய நூல்களின் பட்டியலைக் பதிவிடுவதில் பெருமையடைகிறோம்.
பேராசிரியர் முனைவர் இரா இளவரசு அவர்களால் எழுதி, வெளி யிடப்பட்டும் தமிழக அரசால் அரசுடமையாக்கப் பட்ட நூல்கள்:
மேலும், முது முனைவர் இளங்குமரன், முனைவர் கு திருமாறன் மற்றும் முனைவர் பி தமிழகன் ஆகியோரின் துணையுடன் பெரும் முயற்சியில் தொகுத்த "பாவேந்தம்" என்னும் 23 தொகுதி களாகிய பெருங்களஞ்சியத்தைத் தமிழ்மண் பதிப்பகம் வழியாகப் பதிப்பித்து வெளியிட்டுள்ளார்.
இவ்வரிய நூல் தொகுப்புக்களின் விற்பனை உரிமையை New Century Book House வுக்கு கொடுத்துள்மையால் அதை இப்பட்டியலில் இணைக்கவில்லை.