முனைவர் இரா.இளவரசு வாழ்க்கைக் குறிப்புகள்

Blog Single

முனைவர் இரா.இளவரசு அவர்கள் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இராமநாதபுரத்தில் 12.06.1939இல் பிறந்தார்; இவருடைய பெற்றோர் திருமிகு மு.இராமசாமி திருமதி அருக்காணி அம்மாள். இவருடைய துணைவியார் திருமதி வேலம்மள் சென்னை காயிதே மில்லத் மகளிர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர்.

பூவாளூர், இலால்குடி உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார்; திருச்சி தேசியக் கல்லூரியில் புதுமுக வகுப்பில் கணிதப் பாடம் கற்றார்; பேராசிரியர் இராதாகிருட்டிணன் அவர்களிடம் மாணவராக இருந்து தமிழ் கற்றார்; பின், திருச்சி தூய வளனார் கல்லூரியில் இளங்கலைப் பட்டத்திற்குப் பொருளியல் படித்தார். காரைக்குடி அழகப்பா கல்லூரியில் பேராசிரியர் வ.சுப.மாணிக்கனாரின் மாணவராக இருந்து முதுகலையில் தமிழ் எடுத்துப் படித்தார்.

பின்னர் கேரளப் பல்கலைக்கழகத்தில் வ.ஐ.சுப்பிரமணியாரின் கீழ் “பெருங்கதையின் மொழியமைப்பு”இவர் திருச்சி காசாமியான் உயர்நிலைப் பள்ளியில் 1963இல் தமிழாசிரியர் பணியைத் தொடங்கினார். பின், கேரளப் பல்கலைக்கழகத்தில் 1965-1969 வரை ஆய்வாளராகவும் ஆசிரியராகவும் பணிபுரிந்தார். காரைக்குடி, அழகப்பா கல்லூரியில் ஓராண்டுக் காலம்(1969-1970) தமிழ்த்துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார். 1970ஆம் ஆண்டுமுதல் புதுகோட்டை, தஞ்சை, கரூர், சென்னை ஆகிய ஊர்களிலுள்ள அரசுக் கல்லூரிகளில் துணைப் பேராசிரியராகவும் பேராசிரியராகவும் 1997 வரை பணிபுரிந்திருக்கிறார். திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகப் பாரதிதாசன் உயராய்வு மையத்தில் பேராசிரியராகவும் தலைவராகவும் 1999 முதல் 2004 வரை பணியில் இருந்துள்ளார். என்னும் பொருள் பற்றி ஆய்ந்துன் முனைவர் பட்டம் பெற்றார். இவ்வாறு கணிதமும் பொருளியலும் கற்றும், தமிழின்பால் மாறாப் பற்றுக் கொண்டார்.

சென்னையிலுள்ள இரத்தினவேல் சுப்பிரமணியம் செந்தமிழ்க் கல்லூரி, திருவள்ளுவர் தமிழ்க்கல்லூரி, காஞ்சி மணிமொழியார் தமிழ்க் கல்லூரி ஆகியவற்றில் எவ்வித ஊதியம் எதிர்பார்ப்பின்றி அரும்பணியாற்றியுள்ளார். மேலும், இந்திய ஆட்சிப் பணித் தேர்வு எழுதும் தாழ்த்தப்பட்ட, பிற்பட்ட வகுப்பு மாணவர்களுக்கான சென்னையில் உள்ள தனிப்பயிற்சி நிறுவனங்களில் பகுதிநேரப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார்.

இவரது மேற்பார்வையில் எண்மர் (8) முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்; பதினேழு பேர் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றுள்ளனர். இவர் பல்கலைக்கழகங்களிலும் மற்றும் பல இலக்கிய அமைப்புகளிலும் சொற்பொழிவுகள் நிகழ்த்தியிருக்கிறார். மதுரை காமராசர், சென்னைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில், “பாவேந்தரும் திருக்குறளும்”, “பாரதிதாசன் பற்றிய ஆய்வுகள்” முதலான தலைப்புகளில் இவர் ஆற்றிய ஆய்வுரைகள் குறிப்பிடத்தக்கவை.

முனைவரின் பெருமைகள்